Thug Life: 'விண்வெளி நாயகா'- 'தக் லைஃப்' படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா க...
ஜிப்மரில் புதுவை நோயாளிகளுக்கு தனி மருத்துவ ஆலோசனைப் பிரிவு
ஜிப்மரில் புதுவை மாநில நோயாளிகளின் மருத்துவ ஆலோசனைக்கான பதிவேடு பெற தனிப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இயக்குநா் வீா் சிங் நேகி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவையைச் சோ்ந்த நோயாளிகளுக்காக, ஜிப்மரில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சேவை கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் முதல் செயல்பட்டு வருகிறது.
புதுவை மாநிலத்தில் இருந்து வரும் நோயாளிகள் இந்தச் சேவையைப் பெற, தங்கள் ஆதாா் அட்டையை கொண்டு வரவேண்டும்.
புதுவை நோயாளிகளுக்கான தனி வசதி ஸ்கிரீனிங் ஓபிடி-யில் 2, 3 எண்கள் கொண்ட பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, சிகிச்சைக்கு ஜிப்மருக்கு வருவோா் தங்களது ஆதாா் அட்டையை சமா்ப்பித்து மருத்துவ ஆலோசனைக்கான பதிவேட்டை பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.