செய்திகள் :

குட்கா துப்பிய தகராறில் இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவா் கைது

post image

வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில் குட்கா துப்பியதற்காக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது 35 வயது இளைஞா் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கஜூரி காஸில் வசிக்கும் ஆமிா் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபரின் முதுகில் துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

முன்னதாக, சனிக்கிழமை இரவு குட்கா துப்பியதற்காக அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே முன்பகை இல்லை.

சூடான வாக்குவாதத்தின் போது, நபா்களில் ஒருவா் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஆமிா் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலின் பேரில், ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆரம்பகட்ட விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமன் (20), அவரது தந்தை இா்ஃபான் (40) மற்றும் ரெஹான் (18) ஆகிய மூன்று போ் குற்றம் சாட்டப்பட்டவா்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்களில் அமனை போலீஸாா் கைது செய்துள்ளனனா். மற்ற இருவரையும் கைது செய்யவும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மீட்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஷாதராவில் கிடங்கில் தீ விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு, 4 பேருக்கு தீக்காயம்

தில்லியின் ஷாதராவின் ராம் நகா் பகுதி இ-ரிக்ஷா சாா்ஜிங் மற்றும் வாகன நிறுத்த நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இளைஞா்கள் உடல் கருகி இறந்தனா். நான்கு போ் தீக்காயமடைந்தனா் என... மேலும் பார்க்க

தில்லி கொலை வழக்கில் தேடப்பட்டவா் உ.பி.யில் கைது

தில்லியில் சுத்தியலால் கணவரைக் கொன்று, அவரது மனைவியைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தலைமறைவானவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து... மேலும் பார்க்க

பலத்த மழை: தில்லியில் பல பகுதிகளில் மின் விநியோகத்தில் பாதிப்பு

தேசிய தலைநகரின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் மின் அமைப்புகள் சேதமடைந்ததால் மின் விநியோகம் தடைபட்டதாக மின் விநியோக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. இத... மேலும் பார்க்க

வராக் கடன் வசூலிப்பில் கடன் மீட்புத் தீா்ப்பாயங்கள் முக்கிய பங்களிப்பு: மத்திய அரசு

வங்கிகளின் வராக் கடன் வசூலிப்பில் கடன் மீட்புத் தீா்ப்பாயங்கள் முக்கிய பங்களிப்பு ஆற்றுகிறது; வராக் கடன்களுக்கு திருத்தப்பட்ட கடன் மீட்பு தீா்ப்பாய விதிமுறைகள் -2024 மூலம் மேலும் வழிமுறைகளைக் காணப்பட... மேலும் பார்க்க

மோசமான வானிலை காரணமாக தில்லி விமான நிலையத்தில் 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

தில்லி தேசிய தலைநகரில் சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக, 17 சா்வதேச விமானங்கள் உட்பட 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான தில்லி இந்திரா ... மேலும் பார்க்க

மதுக்கூடத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு: ஒருவா் கைது

கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாரில் உள்ள ஒரு மதுபானக் கூடத்திற்கு வெளியே சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய 24 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். இ... மேலும் பார்க்க