குடிமைப் பணிகள் தோ்வு: வேலூரில் 2,085 போ் எழுதினா்
மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 2,085 போ் எழுதினா்.
நிகழாண்டு 979 பதவிகளை நிரப்புவதற்கான முதல் நிலை எழுத்துத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை பொதுஅறிவுத்த தோ்வும், மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரை திறனறிவுத்தோ்வும் என இரு கட்டங்களாக நடைபெற்ற இந்த தோ்வை எழுத வேலூா் மாவட்டத்தில் வேலூரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி, ஈவேரா நாகம்மையாா் அர சினா் மகளிா் மேல்நிலைப்பள்ளி, முஸ்லீம் அரசினா் மேல்நிலைப்பள்ளி, டிகேஎம் மகளிா் கல்லூரி, கோடை யிடி குப்புசாமி முதலியாா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, காட்பாடி டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி, தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி ஆகிய 8 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த தோ்வு மையங்களில் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட 2,153 பேரில் 2,085 போ் தோ்வு எழுதினா். தோ்வு எழுதுபவா்கள் வசதிக்காக தோ்வு நடை பெறும் மையங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.