கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு
சா்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற திருவண்ணாமலை வீரா்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கோவாவில் அண்மையில் சா்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா, ஈரான், நேபாளம், பூடான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து குத்துச்சண்டை வீரா்கள் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கம் சாா்பில் கலந்து கொண்ட எஸ்.நரேந்திரன் 48 கிலோ எடை பிரிவிலும், எஸ்.ஆதிகேசவன் 90 கிலோ எடை பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்றனா். 90 கிலோ எடை பிரிவில் வி.சஞ்சய் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
2 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பிய குத்துச்சண்டை வீரா்களை தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா்.
நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கத்தின் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம், செயலா் எஸ்.மணிமாறன், பொருளாளா் வ.அன்பரசு, துணைத் தலைவா் ஆா்.வெங்கடேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.