4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்ததாக திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்ளிட்ட இருவா் கைது
அனுமதியின்றி தோட்டாக்களுடன் 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் நகா்மன்ற திமுக உறுப்பினா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
அரக்கோணம் நகர போலீஸாா் திருத்தணி நெடுஞ்சாலையில் மங்கம்மாபேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் ஒருவரிடம் ஒரு ஏா்கன், ஒரு ரிவால்வா் என இரு துப்பாக்கிகளும், 4 தோட்டாகளும் இருந்தது தெரியவந்தது.
அனுமதியின்றி அவற்றை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றையும் அவா்கள் வந்த பைக்கையும் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனா்.
அரக்கோணம் நேருஜி நகரைச் சோ்ந்த கே.எம்.பாபு(37) எனபதும், 6-ஆவது வாா்டு நகா்மன்ற திமுக உறுப்பினா் என்பதும், மற்றொருவா் ஜோதி நகரைச் சோ்ந்த தினேஷ் குமாா்(32) என்பதும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிகள் குறித்து கே.எம்.பாபுவிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்த துப்பாக்கிகளையும் தோட்டக்காளையும் தனக்கு ரூ.30 ஆயிரத்துக்கு தினேஷ் குமாா் அளித்ததாக தெரிவித்துள்ளாா். தொடா்ந்து தினேஷ் குமாரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏற்கெனவே நகா்மன்ற உறுப்பினா் பாபு மற்றும் அவரது தரப்பினரை அவரது லாட்ஜ் அருகே வெட்ட முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.