தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவுக்கு முதல்வர், இபிஎஸ், விஜய் உள்ளிட்ட அரசியல் த...
போலி சான்றிதழில் பணி: ஊராட்சி செயலா் மீது புகாா்
காவேரிபாக்கம் வட்டாரத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்ததாக ஊராட்சி செயலா் மீது போலீஸில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப் பதிந்தனா்.
காவேரிபாக்கத்தை அடுத்த களத்தூா், பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன் (56). இவா், காவேரிபாக்கம் வட்டாரம், சங்கரன்பாடி ஊராட்சியில் செயலராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த 2013-இல் பணிக்கு சோ்ந்தபோது அளித்த பத்தாம் வகுப்பு சான்றிதழ் போலி என தற்போது உண்மை தன்மைக்கு அனுப்பப்பட்டதில் தெரிய வந்தது.
இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இது குறித்து காவேரிபாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவபிரகாசம் காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான மகேந்திரனைத் தேடி வருகின்றனா்.