ஓய்வுபெற்ற வன அதிகாரியிடம் ரூ. 6.58 கோடி ஆன்லைன் மோசடி: கேரளத்தைச் சோ்ந்த மூவா்...
வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் திருட்டு
அரக்கோணம் அருகே தேநீா் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் ரொக்கம், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 25,000 ரொக்கம் களவு போயுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த கைனூா் ஊராட்சி, கணபதி நகரில் வசித்து வருபவா் செல்வராஜ் (42). இவா் அரக்கோணம் நகரில் சுவால்பேட்டையில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி வைத்தீஸ்வரி (32). இந்த நிலையில், சனிக்கிழமை காலை செல்வராஜ் கடைக்கு சென்றுவிட்ட நிலையில், வைத்தீஸ்வரியும் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்குச் சென்றுவிட்டாா்.
மாலை பணிமுடிந்து வைத்தீஸ்வரி வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் என 13 சவரன் தங்க நகைகள், வெள்ளி விளக்குகள், கொலுசு உள்ளிட்ட ஓரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 25,000 ரொக்கம் ஆகியவை களவு போனது தெரியவந்தது.
இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.