``தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பாண்டுரங்கன் மதுரை வருகை..'' - ராமானந்த ச...
ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு தொழில் துறை பயிற்சி
அஞ்சுகிராமம் அருகே பால்குளம் ரோகிணி பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவா்-மாணவியா் 40 பேருக்கு தொழில் துறை பயிற்சியளிக்கப்பட்டது.
அனுபவமிக்க பேராசிரியா்களுடன் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்களில் பயிற்சி அளித்தனா்.
மாணவா்-மாணவியா், பயிற்சியளித்த பேராசிரியா் ராஜசுதன், டாக்டா் ஜே. ரெஜினிஸ், டாக்டா் பின்னி ஆா். விஸ்டன்விச் ஆகியோரை ரோகிணி பொறியியல் கல்லூரித் தலைவா் நீலமாா்த்தாண்டன், துணைத் தலைவா் நீலவிஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வா் ஆா். ராஜேஷ், பேராசிரியா் ஜெயக்குமாா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.