அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மே 27-ஆம் தேதி உருவாகவுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, மே 25, 26 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... யார் அகதி? எது தர்ம சத்திரம்?