செய்திகள் :

விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் ரேவதி?

post image

ஜன நாயகன் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடிகை ரேவதி நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்கி வருகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் பேசும் படமாகவும் இது உருவாகி வருகிறதாம்.

அண்மையில், பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்ததாகவும் தற்போது முக்கியமான காட்சிகளை படப்பிடிப்பு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடிகை ரேவதி நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக, ரேவதி நடிகர் விஜய்யுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது, 23 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தில் அவர் இணைந்திருப்பது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள்... சிம்புவைப் பாராட்டிய கமல்!

குபேரா கதை முன்னோட்ட விடியோ!

குபேரா திரைப்படத்திற்கான முன்னோட்ட விடியோ ஒன்றை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் ந... மேலும் பார்க்க

அப்துல் கலாம் கதையைப் படமாக்குவது சவாலானது: ஓம் ராவத்

அப்துல் கலாமின் பயோபிக் குறித்து அப்படத்தின் இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் இட்லி கடை, குபேரா ஆகிய படங்களில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளி... மேலும் பார்க்க

விக்ராந்த் நடித்த வில் பட டீசர்!

நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவான வில் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் விக்ராந்த் 10 ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகராக வரும் அளவிற்குப் பெரிதாகப் பேசப்பட்டவர். நாயகனாக அவர் நடித்த படங்கள... மேலும் பார்க்க

ஓடிடியில் சல்மான் கானின் சிக்கந்தர்!

சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படம் ஓடிடியில் இன்று(மே 25) வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அகிரா படத்திற்கு பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கிய... மேலும் பார்க்க

குறுகிய காலத்தில் நிறைவடைந்த புன்னகைப் பூவே தொடர்!

புன்னகைப் பூவே தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்துள்ளது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் புன்னகைப் பூவே. இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் ஹர்ஷ் நாக்பால், ஐஷ்வர்யா ஆகியோர் நடித்து வந்தனர்புன்... மேலும் பார்க்க

கார்த்தி பிறந்த நாள்: சர்தார் - 2 போஸ்டர் வெளியீடு!

நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சர்தார் - 2 படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து சர்தார் - 2 படப்பிடிப்பில் இணைந்தார். இயக்குநர் பி.எஸ். மித்ரன் இய... மேலும் பார்க்க