செய்திகள் :

Dhoni : 'இறைவனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்!' - உடல்நிலை குறித்து தோனி

post image

'குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்!"

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி அஹமதாபாத்தில் நடந்து வருகிறது. சென்னை அணியின் கடைசி லீக் போட்டி என்பதால் தோனி என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. தோனிதான் டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தன்னுடைய உடல்நிலை குறித்தும் பேசியிருந்தார்.

தோனி
தோனி

'அது கஷ்டம்தான்!' - தோனி

டாஸில் தோனி பேசியவை, 'நாங்கள் முதலில் பேட் செய்யப்போகிறோம். பேட்டிங் ஆட நல்ல பிட்ச்சாக இருக்கிறது. உடல்நிலையைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் எனக்குப் பெரிய சவாலாகத்தான் இருக்கிறது. அதுவும் கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கும்போது உடல்நிலையைப் பேணுவது ரொம்பவே முக்கியமானது.

அணியின் பயிற்சியாளர் குழு இதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. நான் இப்போது வரை சர்வைவ் ஆகிவிட்டேன். சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும்போது எனது உடல்நிலையில் பெரிதாகப் பிரச்னைகள் இருந்ததில்லை. அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். சென்னை அணியின் மைதானம் முன்பு போல இல்லை.

தோனி
தோனி

இப்போது மாலை நேரங்களில் அவ்வளவு சூடாக இருப்பதில்லை. சென்னையைவிட இங்கே வெயில் அதிகம். இன்றைய போட்டியில் அஷ்வினுக்கு பதில் தீபக் ஹூடா ஆடுகிறார்.' என்றார்.

GT vs CSK: `அட... நம்ம CSK வா இது?' - வெற்றியுடன் சீசனை முடித்த தோனி & கோ

'அசத்தல் சிஎஸ்கே!'சீசன் முழுவதும் கொடுக்காத சிறப்பான பெர்பார்மென்ஸை சீசனின் கடைசி போட்டியில் கொடுத்திருக்கிறது சென்னை அணி. பிசிறே இல்லாமல் ஆடி குஜராத் அணி ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது.GT... மேலும் பார்க்க

Dhoni : 'ஒரு பைக் ரைடு போயிட்டு...' - ஓய்வு குறித்து தோனி | Full Speech

'சென்னை வெற்றி!'குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை சென்னை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த சீசனில் சென்னையின் கடைசிப் போட்டி இதுதான். போட்டிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன... மேலும் பார்க்க

Shreyas Iyer: `ஸ்ரேயஸை ஏன் தேர்வு செய்யவில்லை' - இந்திய டெஸ்ட் அணி தேர்வு குறித்து சேவாக் கேள்வி

இங்கிலாந்துக்கெதிராக அதன் சொந்த மண்ணில் அடுத்த மாதம் (ஜூன்) 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில், இந்திய புதிய கேப்டனாக சுப்மன் கில்லும... மேலும் பார்க்க

PBKSvsDC: "போட்டி முடிந்த பிறகு கருணிடம் பேசினேன்" - சிக்ஸ் கொடுக்காதது குறித்து ப்ரீத்தி ஜிந்தா

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கான நான்கு இடங்களையும் குஜராத், பஞ்சாப், பெங்களூரு, மும்பை ஆகிய அணிகள் பிடித்துவிட்டாலும், அதில் முதல் இரண்டு இடங்களை எந்த அணி பிடிக்கப் போகிறது என்கிற சர்ப்ரைஸ்... மேலும் பார்க்க