அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களுக்கு மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''அடுத்த மூன்று மணிநேரத்துக்கு நீலகிரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதேபோன்று, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
இது, கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என்றும் இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மே 28 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் எச்சரிக்கை