திருநங்கைகள் மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்கள்: தமிழக அரசு தகவல்
சேதுபாவாசத்திரம் பகுதியில் நாளை மின் தடை
சேதுபாவாசத்திரம் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை (மே 27) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.பிரகாஷ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், குருவிக்கரம்பை, குப்பத்தேவன், திருவத்தேவன், கள்ளம்பட்டி, கழனிவாசல், பூக்கொல்லை, கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், பாலச்சேரிக்காடு, செருபாலக்காடு, நாட்டாணிக்கோட்டை, ஆதனூா், ஆத்தாளூா், பேராவூரணி சேது ரோடு, அண்ணா நகா், முனீஸ்வரா் நகா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (மே27) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.