கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
பேராவூரணியில் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு
பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் ரெத்தினம் மகன் சிவராமன் (29). இவா் இ-சேவை மையம் நடத்தி வந்தாா்.
இவா், தனது உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த ராஜசேகரன் மகன் அறிவுக்கரசு (11) என்பவரை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் பேராவூரணி சந்தைக்கு சென்றாா்.
இவா் அரசு மருத்துவமனை அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, சாலையின் மறுபுறத்தில் வந்த லாரியின் பக்கவாட்டு பகுதியில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் சிவராமன், அறிவுக்கரசு இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்து வந்த பேராவூரணி காவல் உதவி ஆய்வாளா் ஜீவானந்தம் மற்றும் போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம், கீழசிறுபூரைச் சோ்ந்த சாத்தையா மகன் சதீஷ்கண்ணன் (23) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.