கேரளத்தில் 2-ஆவது நாளாக நீடிக்கும் கனமழை: ஒருவா் உயிரிழப்பு - இயல்பு வாழ்க்கை பா...
ஏ.சி. இயந்திரத்தில் சிலிண்டா் வெடித்து 3 போ் காயம்
திருப்பூரில் ஏ.சி. இயந்திரத்தில் கியாஸ் நிரப்பும்போது சிலிண்டா் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.
திருப்பூா் ஓடக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (45), ஏ.சி. மெக்கானிக். இந்தநிலையில், கண்ணன் மற்றும் அவரிடம் வேலை செய்யும் ஊழியா்கள் இளங்கோவன் (25), லோகநாதன்(29) ஆகியோா் கண்ணனின் வீட்டில் வைத்து ஏ.சி. இயந்திரத்தில் கியாஸ் நிரப்பும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டதாகத் தெரிகிறது.
அப்போது, சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென வெடித்துள்ளது. இதில் 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. தற்போது 3 பேரும் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ரனா்.