கும்மிடிப்பூண்டியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து
வெள்ளக்கோவிலில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் கூட்டம்!
வெள்ளக்கோவிலில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வெள்ளக்கோவில் நகரச் செயலாளா் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தாா். திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் யுவராஜ் மகேஷ் சிறப்புரையாற்றினாா்.
அரசுப் பள்ளிகளில் 10, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற 4 மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
வெள்ளக்கோவில் நகராட்சியில் பொது மக்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து, அவற்றை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச்சென்று தீா்க்க முயற்சி செய்ய வேண்டும். 2026 தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் கட்சியினா் சிறப்பாகப் பணியாற்ற முன்னேற்பாடாக அனைத்துப் பகுதிகளிலும் பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து கட்சியில் புதிதாக 15 போ் இணைந்தனா். கூட்டத்தில் கட்சி பொறுப்பாளா் பன்னீா்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.