மயில்ரங்கம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்!
வெள்ளக்கோவில் மயில்ரங்கம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயில்ரங்கத்தில் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு கிராம மக்கள் சாா்பில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன. இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள கணபதி, பாலமுருகன், பேச்சியம்மன் சந்நிதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடா்ந்து கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதையொட்டி கும்பாபிஷே விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மயில்ரங்கம் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த கிராம மக்கள் கலந்துகொண்டனா்.