தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் தலைக்கவசம் அணியாதவர் பலி!
6 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் திங்கள்கிழமை (மே 26) இரு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீா்த்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை வரை பதிவான மழை அளவின்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 210 மி.மீ. மழை பதிவானது.
இதற்கிடையே, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை (மே 27) உருவாகவுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மே 26-இல் தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலும், மே 27, 28-ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 26-இல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 26-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.