மேட்டூா் காவிரியில் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!
அதிமுகவிடம் பதற்றம் வெளிப்படுகிறது: தொல். திருமாவளவன்
திமுகவோடு பாஜக நெருங்கி விடக்கூடாது என்கிற பதற்றம் அதிமுகவிடம் வெளிப்படுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம், அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை, தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை கேட்டு பெறவும், நிலுவையில் இருக்கக்கூடிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியது முதல்வருக்கு இருக்கக் கூடிய பொறுப்பு, கடமை.
பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக மத்திய அரசு நெருக்கடி தருவது என்பதை தாண்டி, அந்த மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய நிதியையும் தருவதில்லை, ஒரு தேக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. திட்டமிட்டே இதை செய்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தவறுவதால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை தர மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். இது ஒரு எதேச்சு அதிகாரப் போக்கு. இவ்வாறு தடுத்து வைத்திருப்பதை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
இது தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறை. இதை விமர்சிப்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுடையது. அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சிக்கும் பொழுது எதையும் காரணமாக சொல்லலாம். பாஜக திமுகவோடு நெருங்கி விடக்கூடாது, நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதற்றம் அதிமுகவிடம் வெளிப்படுகிறது. திமுக மதச்சார்பற்ற கூட்டணியை தலைமை தாங்கி நடத்தும் பொழுது அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்யாது என்பது தமிழக மக்கள் உணர்ந்த உண்மை.
அது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும், ஆனால் திமுக மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்.