கேரளத்தில் 2-ஆவது நாளாக நீடிக்கும் கனமழை: ஒருவா் உயிரிழப்பு - இயல்பு வாழ்க்கை பா...
கோவில்பட்டியில் போதைப்பொருள் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி
போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜேசிஐ கோவில்பட்டி விக்டா் கிங்ஸ், பகடா ஸ்போட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய இப்போட்டியை, காவல்துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
கோவில்பட்டி இனாம் மணியாச்சி விலக்கில் உள்ள பகடா ஸ்போா்ட்ஸ் கிளப் மைதானத்தில் இருந்து நேஷனல் பொறியியல் கல்லூரி வரை சென்று, மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வந்து சேரும் வகையில் 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இப்போட்டியில் 500 போ் கலந்து கொண்டனா்.
கோவையைச் சோ்ந்த சதீஷ் முதலிடம், கேரள மாநிலத்தைச் சோ்ந்த மணி, அருண்குமாா் ஆகியோா் முைறையே 2,3 ஆவது இடத்தைப் பிடித்தனா். 3 பேருக்கும் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதம் பரிசளிக்கப்பட்டது.
4 முதல் 10-ஆவது இடம் பிடித்த 7 பேருக்கு தலா ரூ.500 பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கச் செயலா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். ஜேசிஐ இந்தியா மண்டலத் தலைவா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக ஜேசிஐ மண்டல துணைத் தலைவா் பிரேம் பால்நாயகம், தொழிலதிபா் பி.ஆா். சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா்.