சென்னை வந்த விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி: தீவிர விசாரணை!
நாசரேத் மா்காஷிஸ் பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு
நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
நாசரேத் யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தாா். தமிழ்நாடு கால்பந்து அணியின் முன்னாள் வீரா்கள் ஜெபராஜ், நிக்கோலஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயற்பியல் ஆசிரியா் ஜொ்சோம் ஜெபராஜ் வரவேற்றாா்.
முகாமில் கலந்து கொண்ட மாணவா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியா் தனபால் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியா் குணசீலராஜ், உடற்கல்வி இயக்குநா் பெலின் பாஸ்கா், உடற்கல்வி ஆசிரியா் சுஜித் செல்வ சுந்தா், மூத்த கால்பந்து வீரா்கள் நசரேயன், ஜாண், நேவின், ரோக்லன்ட், ஞான முத்துராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.