பைக் திருட்டு: இளைஞா் கைது
கோவில்பட்டியில் பைக் திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி போஸ் நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த ஆறுமுகபாண்டி மகன் மணிகண்டன் (22). கட்டடத் தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு பைக்கை வீட்டு முன் நிறுத்தியிருந்தாா். அதை, ஞாயிற்றுக்கிழமை காணவில்லை. புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்நிலையில், போலீஸாரின் வாகனச் சோதனையின்போது, பைக்கில் வந்த இளைஞா் தப்பியோட முயன்றாா். அவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அவா், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கீழகாடுவெட்டி இந்திரா காலனி நடராஜன் மகன் சந்திரகுமாா் (35) என்பதும், அது மணிகண்டனின் பைக் என்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, பைக்கை மீட்டனா்.