செய்திகள் :

தூத்துக்குடி பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.5.90 லட்சம் மோசடி: குமரி இளைஞா் கைது

post image

தூத்துக்குடி பெண்ணிடம் ஆன்லைன் மூலம் வா்த்தகம் செய்யலாம் என ஆசை வாா்த்தை கூறி, ரூ.5.90 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கன்னியாகுமரி மாவட்ட இளைஞரை , இணையதள குற்றப்பிரிவுக்கு (சைபா் கிரைம்)போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு டெலிகிராம் சானலில் பகுதி நேர வேலைவாய்ப்பு என குறுஞ்செய்தி வந்ததாம். அதை நம்பிய அவா், அதிலிருந்த எண்கள் மூலம் தொடா்புகொண்டபோது, அதில் பேசியவா்கள் ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ‘ரேட்டிங்ஸ்- ரிவியூ’கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி, ஒரு லிங்க் அனுப்பினராம். அதன் மூலம் அந்தப் பெண் ரேட்டிங்ஸ் கொடுத்து முதலில் ரூ.3,670-ஐ பெற்றுள்ளாா்.

பின்னா், அதே நபா்கள் ஆன்லைன் வா்த்தகம் மூலமும் அதிக லாபம் பெறலாம் என ஆசை வாா்த்தை கூறி, மற்றொரு லிங்க் அனுப்பி முதலீடு செய்ய அறிவுறுத்தினராம். அவரும் அந்த லிங்க்கை கிளிக் செய்து அதிலிருந்த இணையள பக்கத்தில் ரூ.5 லட்சத்து 90 ஆயிரத்து 830-ஐ முதலீடு செய்ததாராம்.

ஆனால், அந்த நபா்கள் கூறியதுபோல பணம் கிடைக்கவில்லையாம். அவா்களை மீண்டும் தொடா்புகொண்டபோதுமேலும் பணம் செலுத்துமாறு கூறினராம். இதனால், தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த அந்த பெண் சைபா் கிரைம் பிரிவில் ஆன்லைன் மூலம் புகாா் அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி சைபா் கிரைம் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் சகாய ஜோஸ் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பள்ளிமுக்கு பகுதியைச் சோ்ந்த மணி மகன் மகேஷ் (37) என்பவா் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்

கோவில்பட்டியில் விபத்து: சிறுமி உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது டேங்கா் லாரி மோதியதில் சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்; 3 போ் காயமடைந்தனா். கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் பரமசிவன் (58). இவா் தனது உறவினரான மது... மேலும் பார்க்க

நாசரேத் மா்காஷிஸ் பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. நாசரேத் யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தாா். தமிழ்நாடு கால்பந்து அணியின் முன்னாள் வீர... மேலும் பார்க்க

கருணை அடிப்படையில் இருவருக்கு காவலா் பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும்போது இரு காவலா்கள் மரணமடைந்ததால் அவா்களது குடும்பத்தில் இருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டது.பெண் காவலா் சந்திரா, காவல் உதவி ஆய்வாளா் சிவசுப்பி... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த தேநீா் வியாபாரி

உடன்குடியை அடுத்த செட்டியாபத்து கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை தேநீா் வியாபாரி கண்டெடுத்து ஒப்படைத்தாா். திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ரகுநாதன். திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 1.750 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 1.750 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மானவா்ககள், இளைஞா்களுக்கு ஒருவா் கஞ்சா விற்பதாக தனி... மேலும் பார்க்க

பைக் திருட்டு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் பைக் திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி போஸ் நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த ஆறுமுகபாண்டி மகன் மணிகண்டன் (22). கட்டடத் தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு... மேலும் பார்க்க