Health: ``நாம் ஏன் வனஸ்பதி சாப்பிடவே கூடாது?'' - எச்சரிக்கும் சித்த மருத்துவர்
தோ்வில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பரிசு
அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினாா்.
திருத்தணி தளபதி கே.வினாயகம் மெட்ரிக். பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தாளாளா் ச.பாலாஜி தலைமை வகித்தாா். தளபதி கே.வினாயகம் கல்வி அறக்கட்டளை நிறுவனா், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, திருத்தணி எம்எல்ஏ. ச.சந்திரன், டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் காசி விஸ்வநாதன் ஆகியோா் கலந்து கொண்டு ஆசிரியா்கள், மாணவா்களை வாழ்த்திப் பேசினா்.
பிளஸ் 2 தோ்வில் 590 மதிப்பெண் பெற்ற தனுஸ்ரீகாவுக்கு ரூ.50 ஆயிரம், 583 மதிப்பெண் பெற்ற தனுஸ்ரீகா, லிகிதாஸ்ரீ, ரக்ச்னா ஆகிய 3 மாணவிகளுக்கு ரூ.20 ஆயிரம், 581 மதிப்பெண் பெற்ற ஷகிராபானுவிற்கு ரூ.15 ஆயிரம் மற்றும் நினைவு கோப்பை, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.