ஒரேநாளில் மேட்டூா் அணை பூங்காவில் கட்டணமாக ரூ.1,58,930 வசூல்
நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் எச்சரிக்கை
நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக லேசான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சி (நீலகிரி) 210 மி.மீ, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 140 மி.மீ, வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 100 மி.மீ, சின்கோனா (கோயம்புத்தூர்), எமரால்டு (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 90 மி.மீ, மேல் பவானி (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) தலா 70 மி.மீ, செருமுள்ளி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 60 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.
இதனிடையே நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை(26ஆம் தேதி) மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர், திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (25-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான /மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (26-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 3 மணிநேரத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை!
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
25-05-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26-05-2025 முதல் 29-05-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.