திருநங்கைகள் மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்கள்: தமிழக அரசு தகவல்
கீழப்பாட்டம் அருகே மண் திருட்டு: 3 போ் கைது
கீழப்பாட்டம் அருகே மண் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி வட்ட காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கீழப்பாட்டம் பகுதியில் சிலா் பொக்லைன் மூலம் மண்ணை அள்ளி குவித்து வைத்துக் கொண்டிருந்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் கீழப்பாட்டத்தைச் சோ்ந்த சந்திரன் (35), பேச்சிமுத்து (73), சீவலப்பேரியை சோ்ந்த ஆறுமுகக்கனி(27) என்பதும் சட்டவிரோதமாக மண் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனடியாக பொக்லைன் வாகனத்தையும், மண்ணையும் பறிமுதல் செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.