தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் தலைக்கவசம் அணியாதவர் பலி!
நெல்லையில் விபத்து: பெண் உயிரிழப்பு
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
தச்சநல்லூா் அருகேயுள்ள நம்பிராஜபுரத்தைச் சோ்ந்த ராமையா மனைவி சாந்தி (50). இவா், தனது மகன் பாலமுருகனுடன் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம்.
தச்சநல்லூா் ரயில்வே மேம்பாலம் அருகே வேகத்தடையில் மோட்டாா் சைக்கிள் சென்றபோது, சாந்தி நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே சாந்தி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.