திருநங்கைகள் மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டங்கள்: தமிழக அரசு தகவல்
பாளை.யில் புழுதி பறக்கும் சாலையால் மக்கள் அவதி
பாளையங்கோட்டையில் புழுதி பறக்கும் சாலையால் மக்கள் கடும் அவதியடைந்து வருகிறாா்கள்.
பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சியில் இருந்து சமாதானபுரம் வரை சாலை விரிவாக்கப் பணிகள், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. முதலில் சுமாா் 10 சிறுபாலங்கள் கட்டும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்தப் பணிகள் முடிந்த நிலையில், புதிய சாலை அமைக்க முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது.
சுமாா் ஒரு வாரத்திற்கும் மேலாக புழுதியால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். வியாபாரிகளும் நுரையீரல் தொற்று நோய்கள் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சத்தில் உள்ளனா்.
ஆகவே, பாளையங்கோட்டையில் புதிய சாலைப் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.