Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிக...
களக்காடு கோயில் தெப்பக்குளத்தில் இளைஞா் சடலம் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கோயில் தெப்பக்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
களக்காட்டைச் சோ்ந்த தங்கவேல் மகன் பிச்சைமுத்து (32). சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சாலைகளில் சுற்றித் திரிந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அவா் களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தில் இறந்துகிடந்தது தெரியவந்தது. போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அவா் தெப்பக்குளத்தில் தவறிவிழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.