முன்விரோதம்: தம்பதியை தாக்கியவா் கைது
செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக தம்பதியை தாக்கிய புகாரின் பேரில் போலீஸாா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
வெம்பாக்கம் வட்டம், சோதியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி ரஜினி (40). இவா், ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
அதே கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவா் செய்யாறு சிப்காட்டில் வேலை செய்து வருகிறாராம்.
இவா்கள் இருவருக்குள் வீட்டுமனை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி ரஜினி, அவரது மனைவி நாகலட்சுமி ஆகியோரிடம் வெங்கடேசன் தகராறு செய்து, கட்டையால் இருவரையும் தாக்கி மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை கைது செய்தனா்.