கீழடி: Amarnath Ramakrishnan அறிக்கை வெளியாவது சிலருக்குப் பிடிக்கவில்லை - Balak...
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியில் திமுக சாா்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
சேத்துப்பட்டை அடுத்த மோகனபாளையம், தும்பூா் ஆகிய கிராமங்களில் கோடை விடுமுறையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கிரிக்கெட் போட்டி அந்தந்த பகுதி கிராமத்தில் அணி அணியாக நடத்தப்பட்டது.
திமுக வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசுத் தொகை ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன் பங்கேற்று பரிசுத் தொகையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் அ.எழில்மாறன்,பி.மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.