குடலிறக்க பாதிப்பு: 90 வயதுமூதாட்டிக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை
கேரளத்தில் கனமழை: 15-க்கும் மேற்பட்ட ரயில்கள் புறப்படுவதில் தாமதம்!
திருவனந்தபுரம்: கேரளத்தில் கனமழையால் 15க்கும் மேற்பட்ட ரயில்கள் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டன.
கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கிவிட்ட நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கேரள எல்லைப் பகுதியையொட்டிய தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்றும் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட்(சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் வழித்தடங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று(மே 27) முக்கிய ரயில்கள் பல தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ்
சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ்
மங்களூரு - கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ்
எழும்பூர் எக்ஸ்பிரஸ்
கோயம்புத்தூர் - கண்ணூர் பாசஞ்சர்
கோழிக்கோடு - சொரனூர் பாசஞ்சர்
திருவனந்தபுரம் - மங்களூரு மலபார் எக்ஸ்பிரஸ்
அந்தியோதயா எக்ஸ்பிரஸ்
நிஸாமுதீன் - எர்ணாகுளம் மங்களா எக்ஸ்பிரஸ்
குருவாயூர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்
திருவனந்தபுரம் - நிலாம்பூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ்
அமிர்தசரஸ் - கொச்சுவேலி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
மங்களூரு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
நேத்ராவதி எக்ஸ்பிரஸ்
ஏரநாடு எக்ஸ்பிரஸ்
திருவனந்தபுரம் - மங்களூரு மாவேலி எக்ஸ்பிரஸ்
சொரனூர் பாசஞ்சர்
ஆகிய ரயில்கள் பல தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.