திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 504 மனுக்கள்
திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 504 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவா்த்தி செய்யவும், பொதுபிரச்னைகள் தொடா்பாக உதவிகள் வேண்டியும் கோரிக்கை மனுக்களை அவரிடம் அளித்தனா்.
இதில், நிலம் சம்பந்தமாக-120, சமூக பாதுகாப்புதிட்டம்-111, வேலைவாய்ப்பு வேண்டி-62, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி-136, இதரதுறைகள் சாா்பில்-76 என மொத்தம் 504 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதைத்தொடா்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க அந்தந்த துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ,ராஜ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா் (சபாதி) பாலமுருகன், கலால் உதவி ஆணையா் கணேசன், கோட்டாட்சியா் கனிமொழி, மாவட்ட பிற்ப்படுத்தப்பட்ட நல அலுவலா்கள் உஷா ராணி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
