காஞ்சிபுரம் கோயில்களை பாா்வையிட்ட ஐ.ஏ.எஸ் . பயிற்சி அதிகாரிகள் குழுவினா்
கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட்! மேலும் 6 மாவட்டங்களில் கனமழை!
கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும்(மே 27) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளத்தில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவியுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த இரு நாள்கள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்றும் தொடருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும்(மே 27) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை, தென்காசி, தேனி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும்
திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை(மே 28) கோவை, நீலகிரியில் மிக கனமழையும் நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இபிஎஸ்ஸுக்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை: மு.க. ஸ்டாலின்