செய்திகள் :

திமுக ஆட்சி முடியும் வரை மக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்: இபிஎஸ்

post image

திமுக ஆட்சி முடியும் வரை திமுகவினரிடம் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், காவல் துறையால் மிரட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்ட திமுக நிர்வாகி தெய்வச்செயலை ஏன் திமுக காத்து நிற்கிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி!

அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் திமுக கவுன்சிலர் பாபு உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

இந்நிலையில், அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தான் திமுக அரசின் காவல்துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.

திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல், மாணவியை ஏமாற்றுகிறார்- பல திமுகவினரின் பாலியல் இச்சைக்கு அந்த மாணவியை இணங்குமாறு துன்புறுத்துகிறார்- இதனை தைரியமாக வந்து புகார் அளித்த மாணவியை காவல்துறை மிரட்டுகிறது.

திமுக இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. திமுக நகராட்சி கவுன்சிலரிடம் முறையான அனுமதி பெறாத துப்பாக்கி இருக்கிறது!

போதை இளைஞரிடம் கத்தி, பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது . இதைத்தானே இந்த ஸ்டாலின் மாடலைத் தானே அலங்கோல ஆட்சி என்கிறேன்?! இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது?

இந்த அவலத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் எங்களுக்கு தடை; ஆனால், குற்றவாளிக்கு ஆதரவாக திமுக பொதுக்கூட்டம் நடத்துகின்றது. நான் கேட்கிறேன், முதல்வரே உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா? ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக?

தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு- காக்கப்படுகிறதா? அப்படியெனில், யார் அந்த சார்? பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை, எங்கள் கேள்விகள் ஓயாது! திமுக கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது என்ற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்?

சட்டம்- ஒழுங்கு இந்த லட்சணத்தில் நாறிக் கொண்டிருப்பதற்கு, ஒரு நல்ல முதல்வராக இருந்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், இவர் அதெல்லாம் செய்யப்போவது இல்லை.

நான் எப்போதும் சொல்வது போல, இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்- குறிப்பாக திமுக-வினரிடம் இருந்து!" என்று பதிவிட்டுள்ளார்.

"கலைஞரின் பேனா" புத்தகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதிய "கலைஞரின் பேனா” நூலினை புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூலாசிரியர் பேராசிரி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பு: கனிமொழி எம்.பி கருத்து

தமிழகக் காவல்துறை விசாரித்த அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வழக்கை நடத்திய லட்சணத்தையும் குற்றவ... மேலும் பார்க்க

சென்னையில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம் பெற புதிய டிஜிட்டல் முறை!

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக பெருநகர சென்னை மா... மேலும் பார்க்க

அத்திக்கடவு குடிநீரில் சாக்கடை கலப்பு: அரசூர் கிராம மக்கள் அவதி

கொள்ளுப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருகிறது. துர்நாற்றத்துடன் புழுக்களும் கலந்து வரும் இந்த நீரால் கிராம மக்கள் சிரமத்து ஆளாகியுள்ளனா். பலரே உடல்நலக் குறைவால் பாதி... மேலும் பார்க்க

நொய்யல் ஆற்று நீரை மலர் தூவி வரவேற்ற எஸ்.பி.வேலுமணி

தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தென்னமநல்லூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் ஒய்யாரமாக பொங்கி வரும் தண்ணீரை மலர் தூவி முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வரவேற்றார்.கோவை மாவட்டத்தின் மே... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றங்களையும் திமுக அரசு சகித்துக்கொள்ளாது! - ஆர்.எஸ். பாரதி

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ... மேலும் பார்க்க