செய்திகள் :

"கலைஞரின் பேனா" புத்தகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

post image

பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதிய "கலைஞரின் பேனா” நூலினை புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூலாசிரியர் பேராசிரியர் இராசகோபலன், முரசொலி செல்வத்தின் வகுப்புத் தோழர், திராவிடர் மாணவ முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றியவர் ஆவார். அவர் ஆண்டுதோறும் ஆழ்வார்கள் ஆய்வு மையக் கூட்டங்களை சிறப்பாக நடத்துகின்ற பாங்கினை கலைஞர் பாராட்டியுள்ளார்.

கலைஞர் ஆட்சித்திற ஆளுமைகள், இலக்கிய ஆளுமைகள் முதலியவற்றை குறித்து இந்நூலில் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

முத்தமிழறிஞர் கலைஞரை தொண்டால் தொட்டவர்கள் உண்டு; அவரைக் கலையால் தொட்டவர்கள் உண்டு; ஆனால், கலைஞருடைய பேனாவைத் தொட்டு, அவரது நெஞ்சைத் தொட்டவர் நூலாசிரியர். கலைஞருடைய எழுத்துக்கள் எனக்குப் பிராணவாயுவாகிப் போனதால், அவற்றைப் பதிவு பண்ணும் ஒலிப்பதிவு கருவியானேன் என்கிறார் நூலாசிரியர்.

இந்நூலில், கலைஞர் தம் வாழ்நாளில் நேரம் காலம் இல்லாமல் எழுதிக் கொண்டிருந்தார்; அதனால்தான் அவருடைய எழுத்துக்கள் நேரம் காலம் இன்றி வாழ்கின்றன என்றும், பண்டித ஜவகர்லால் நேரு, ராபர்ட் ப்ராஸ்ட்டினுடைய கவிதையை எழுதி தம் மேஜை மீது வைத்திருந்தார். ஆனால், கியூபாவின் அதிபர் பெடல் காஸ்ட்ரோ 20.1.2006 இல் கலைஞர் எழுதிக் கொடுத்த கவிதையை ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்த்துத் தம் மேஜையின் மீது வைத்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பு: கனிமொழி எம்.பி கருத்து

உலகத்துக் கவிஞர்களின் எழுத்துக்களோடு முத்தமிழறிஞரின் எழுத்துக்களை ஒப்பிட்டால், மற்றவர்களுடைய எழுத்துக்கள் மலையடிவாரத்தில் நடக்கின்றன. ஆனால், கலைஞரின் எழுத்துக்கள் மலையின் சிகரத்தில் உயர்ந்து நிற்கின்றன என்றும், கலைஞருடைய நாவும் பேனாவும் ஒரே உறையில் கிடக்கும் இரண்டு வாள்கள். கலைஞர் தம்முடைய எழுத்துப்பணியைப் புதுச்சேரியிலிருந்து வெளிவந்த பத்திரிகையில் தொடங்கினார். அந்த முதல் கட்டுரைக்கு "அந்தப் பேனா" எனப் பெயரிட்டிருந்தார். அதனால் இந்த நூலுக்கு "கலைஞரின் பேனா" எனத் தலைப்பிடப்பட்டதாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் மட்டுமன்றி, இந்திய அரசியலையே உச்சி முதல் பாதம் வரை அளந்தது, கலைஞருடைய பேனா என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்துப் பணியை இந்நூல் போற்றிப் புகழ்கிறது.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டப்பேரவை உறுப்பினர் அன்னியூர் சிவா, இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகி சிவம், கற்பகம் புத்தகாலயத்தின் நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என தமிழ்ந... மேலும் பார்க்க

வெடிகுண்டு இருக்குமோ..?: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு!

கோவை: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுத... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படுமா? இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை!

மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமு... மேலும் பார்க்க

நடிகர் ராஜேஷ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்த... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடமேற்கு மற்று... மேலும் பார்க்க

கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அறச்சிந்தனை கன்னட அமைப்புகளுக்கு இல்லையே ஏன்?: - சீமான் கேள்வி

வரலாற்று பேருண்மையை கூறியதற்காக கமல்ஹாசனை மிரட்டும் கன்னட அமைப்புகளுக்கு கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அறச்சிந்தனை இல்லையே ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சீம... மேலும் பார்க்க