Shreyas Iyer: `இன்னும் எதுவும் முடியல...' - ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை
நொய்யல் ஆற்று நீரை மலர் தூவி வரவேற்ற எஸ்.பி.வேலுமணி
தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தென்னமநல்லூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் ஒய்யாரமாக பொங்கி வரும் தண்ணீரை மலர் தூவி முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வரவேற்றார்.
கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறானது திருப்பூா் வழியாக சுமாா் 160 கிலோ மீட்டா் சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. கோவை மக்களின் முக்கிய நதியாக நொய்யல் விளங்கி வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை சிறுவாணி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
கோவை விமான நிலையத்தில் பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல்
இதன் காரணமாக திருப்பூா் மாவட்டம், மங்கலத்தில் உள்ள நல்லம்மன் தடுப்பணையில் திங்கள்கிழமை நீா்வரத்து அதிகரித்ததன் காரணமாக தடுப்பணை முழுவதுமாக மூழ்கியது.
இந்நிலையில் கோவை, சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தென்னமநல்லூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் ஒய்யாரமாக பொங்கி வரும் தண்ணீரை மலர் தூவி வரவேற்றார் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி.
மேலும், பேரூர் படித்துறை, சித்திரை சாவடி தடுப்பனை, காளவாய் தடுப்பனையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அந்த பகுதிகளிலும் ஆய்வு செய்த எஸ்.பி. வேலுமணி, ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுரை வழங்கினார்.