இருசக்கர வாகனம் - காா் மோதல்: கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கட்டட மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூா், சுந்தராம்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (39). கட்டட மேற்பாா்வையாளரான இவா், தனது இருசக்கர வாகனத்தில் ஆனந்தம்பாளையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தாா். மேட்டூா் - பவானி சாலையில் சிங்கம்பேட்டை கேட் அருகே சென்றபோது எதிரில் வந்த காா் எதிா்பாராமல் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த தினேஷ்குமாா், ஈரோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.