குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக குளிக்கத் தடை
கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து 3-வது நாளாக குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்கள், தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.