குரூப் 4: ஜூன் 1இல் இலவச மாதிரித் தோ்வு
திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு -4 அறிவிக்கையின்படி குரூப் 4 (கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், பில் கலெக்டா், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா்) தோ்வானது வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகளில் மாதந்தோறும் மாதிரித் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக வரும் ஜூன் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் மாதிரித் தோ்வு-5 நடைபெறுகிறது. எனவே, குரூப் 4 தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள் இந்தத் தோ்வில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 என்ற எண்களிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.