ஆரணியில் திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை குறித்த துண்டு பிரசுரங்களை அந்தக் கட்சியினா் விநியோகம் செய்தனா்.
துண்டு பிரசுரங்களில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளான மகளிா் உரிமைத்தொகை, மகளிருக்கு இலவச பேருந்து, பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
அண்ணா சிலை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்
தொகுதி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு, கடை, கடையாக வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் விநியோகம் செய்தாா்.
இதில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா் ஊரல் அண்ணாதுரை, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட இணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் இ.கங்காதரன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் ஏ.எம்.ரஞ்சித், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளா் ஏ.எச்.இப்ராஹிம், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலா் அப்சல்பாஷா, நகா்மன்ற உறுப்பினா் மாலிக்பாஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.