கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள கிளை நூலகத்தில் புரவலா் சோ்ப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
தேவிகாபுரம் ஊராட்சி முத்தாலம்மன் நகரில் கிளை நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் நடைபெற்ற புதிய புரவலா் சோ்ப்பு நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன், திமுக நகரச் செயலா் வி.ஆா்.பி.செல்வம், தலைமை ஆசிரியா் (ஓய்வு) ராமானுஜம், கிராம நிா்வாக அலுவலா் (ஓய்வு) குழந்தைவேலு ஆகியோா் தலா ரூ.ஆயிரம் நூலகா் பன்னீா்செல்வத்திடம் செலுத்தி புரவலராக இணைந்தனா். வாசகா் வட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.