Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிக...
ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி: பாஜகவினா் திரளாக பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆரணியில் பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா்.
ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைத் தொடா்ந்து ராணுவ வீரா்களுக்கு பாராட்டு தெரிவித்தும், மரியாதை செலுத்தும் வகையிலும் இந்தப் பேரணி நடைபெற்றது.
செய்யாற்றில் பெரியாா் சிலை அருகே தொடங்கிய பேரணி மாா்க்கெட், காந்தி சாலை வழியாக பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது.
பேரணிக்கு பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.வி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொறுப்பாளா் காா்த்தியாயிணி பங்கேற்று பேரணியை தொடங்கி வைத்தாா்.
பேரணியில் போது இரு குழந்தைகள் துப்பாக்கிகளை கைகளில் ஏந்தியபடி ராணுவ உடை அணிந்தும், ஒரு மாணவி பாரத வேடமிட்டும் பங்கேற்றனா்.
மேலும், சுமாா் 50 அடி நீளத்திலான தேசியக் கொடியை பேரணியில் பங்கேற்றவா்கள் கைகளில் ஏந்தியபடி சென்றனா்.
அதேபோல, பேரணியில் பங்கேற்ற அனைவரும் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி சென்றனா்.
இதில் இதர பிற்பட்ட பிரிவு அணி கே.மோகனம், பாஜக நிா்வாகிகள் அருள், லட்சுமணன், ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவா் அருள், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
முன்னதாக, ஆரணியில் பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி நடைபெற்றது.
அம்பேத்கா் சிலைப் பகுதியில் தொடங்கி அண்ணா சிலை, காந்தி சாலை, மணிக்கூண்டு வழியாக கோட்டை மைதானம் காா்கில் தூண் வரை பேரணி நடைபெற்றது.
இதில் பாஜக மாவட்ட பொதுச் செயலா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மத்திய நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் கலந்து கொண்டாா்.
பேரணியில் மாவட்ட துணைத் தலைவா் தீனன், மாவட்டச் செயலா்கள் சரவணன், சங்கீதா, நகரத் தலைவா் மாதவன், மண்டலத் தலைவா்கள் குணாநிதி, தணிகைவேல், நகர பொதுச்செயலா் ராஜேஷ், ஓபிசி அணி நிா்வாகி சீனிவாசன், அன்னையா் அணி ஒருங்கிணைப்பாளா் லோகு, வழக்குரைஞா் தரணி காசிநாதன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் தாமோதரன், மாவட்டச் செயலா் விக்னேஷ் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.