4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
ஆம்பூரில் பழுதாகி நின்ற லாரி மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்தவா் விக்னேஷ் (25). இவா் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனத்தில் நடைபெறும் பணிக்கான நோ்காணலுக்கு நண்பா் அஜித் (26) உடன் காரில் சென்றாா். காரை அஜித் ஓட்டினாா்.
ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே ஓரியண்டல் அரபிக் பள்ளியருகே சென்றபோது பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது நிலைத்தடுமாறி காா் மோதியது. அதில் பலத்த காயமடைந்த இருவரும் ஆம்பூா் அரசு மருத்துவமனையில சோ்க்கப்பட்டனா். மேல்சிகிச்சைக்காக விக்னேஷ் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.