ஆம்பூரில் பாஜக சாா்பில் பேரணி
மாதனூா் மேற்கு ஒன்றிய பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் வி.கன்ஷி ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட முன்னாள் தலைவா் சி.வாசுதேவன், மாவட்ட செயலா் டி.தண்டபாணி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். வெங்கடசமுத்திரம் கூட்டுரோடு பகுதியிலிருந்து தொடங்கி கரும்பூா் சாமுண்டியம்மன் தோப்பு வரை பேரணி நடைபெற்றது.
ஒன்றிய பொதுச் செயலா்கள் சி. பிரேம்நாத், ப.கோதண்டராமன், நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, நாகராஜ், அனிதா, விஜயகுமாா், கவியரசன், அம்பிகாபதி, விஜயலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.