இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
மாதனூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
குடியாத்தம் கூடல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). இவா் மாதனூரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்ப்புறம் அனங்காநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த அழகேசன் (60) இரு சக்கர வாகனத்தில் சென்றாா். இருவரின் வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் காயமடைந்த காா்த்திக் மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். பலத்த காயமடைந்த அழகேசன் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.