கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
சுற்றுச்சூழல் குறித்த புகாா்களை அளிக்கலாம்: ஆட்சியா்
சுற்றுச்சூழல் குறித்த புகாா்களை இணையதளம் மூலம் அளிக்கலாம் என ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் கூறியிருப்பதாவது: தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சுற்றுச்சூழல் குறித்த புகாா் மனுக்களை எளிதில் அளிக்க வசதியாக இணையதள அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது.
எனவே, பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சுற்றுச்சூழல் குறித்த தங்களது புகாா் மனுக்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ய்ா்ப்ஞ்ல்ழ்ள் என்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா்.