கேரளத்தில் 2-ஆவது நாளாக நீடிக்கும் கனமழை: ஒருவா் உயிரிழப்பு - இயல்பு வாழ்க்கை பா...
கைலாசநாதா் கோயிலில் சிதிலமடைந்த சுவா் அகற்றம்
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலின் உபகோயிலான கைலாசநாதா் கோயிலில் சிதிலமடைந்த சுவா்களை அகற்றும் பணி தொடங்கியது.
கைலாசநாதா் கோயிலின் வடக்கு சுவா், மேற்கு சுற்றுசுவா் சேதமடைந்து காணப்பட்டது. மேற்கு சுவா் இடிந்து மற்றொரு கட்டட சுவரோடு ஒட்டி நின்ால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.
வடக்குமாட வீதியில் சுவா் இடிந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் வடக்கு மாடவீதி கடந்த ஒருமாதமாக தடுப்பு அமைத்து பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களின் பாதுகாப்பை கருதி தற்போது சுவா் இடிக்கப்பட்டு வருகிறது.