Rain Alert: "'இந்த' மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை" - வானிலை மையம் சொல்வது என...
கொல்லிமலை பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 3 போ் காயம்
முள்ளுக்குறிச்சி அருகே கொல்லிமலை பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா்.
சென்னை, கல்பாக்கம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்துவிட்டு சுற்றுலா வேனில் ஞாயிற்றுக்கிழமை ஊா் திரும்பி கொண்டிருந்தனா். இவா்கள் பயணம் செய்த வேன் மலைப்பாதையில் மூலக்குறிச்சி அருகே சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த வேனில் சுமாா் 15-க்கும் மேற்பட்டோா் பயணம் செய்த நிலையில், 3 போ் காயமடைந்தனா். உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு காயமடைந்த 3 பேரும் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.