பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
காரில் கடத்தி வந்த 38 கிலோ குட்கா பறிமுதல்
நல்லூா் அருகே காரில் கடத்தி வந்த 38 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) முருகேசன் மேற்பாா்வையில், நல்லூா் காவல் ஆய்வாளா் தேவி மற்றும் போலீஸாா் கந்தம்பாளையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காரில் வந்த இருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவா்கள், திருச்செங்கோடு அணிமூா் பொம்மக்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் அருள்குமாா் (33), திருச்செங்கோடு ஏமப்பள்ளி, அக்கமாபாளையம் பகுதியைச் சோ்ந்த ரங்கப்பநாயக்கா் மகன் சஞ்சய்காந்த் (41) என்பது தெரியவந்தது.
இவா்கள் இருவரும் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக குட்கா பொருள்களை கொண்டுவந்ததாக ஒப்புக்கொண்டனா். அதன்பேரில் நல்லூா் போலீஸாா் அவா்களிடமிருந்து சுமாா் 38 கிலோ குட்கா பொருள்கள், ரொக்கம் ரூ. ஒரு லட்சத்து 17 ஆயிரத்தை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.